Latestமலேசியா

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில ஆனித் திருமஞ்சனம் !

கோலாலம்பூர். ஜூலை.11- ஶ்ரீ நடராஜ பெருமானுக்கு உகந்த ஆனித் திருமஞ்சன தினத்தை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு பூஜை உபயத்தை ஆண்டுதோறும் பொதுப் பணித் துறை ஊழியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவ்வகையில் இவ்வாண்டு காலையில் சிறப்பு அபிஷேகத்துடன்

துவங்கி, சிறப்பு பூஜை, அன்னதானம் பின் மாலையில் மஹா ஹோஹம், பின் ஶ்ரீ நடராஜ பெருமானின் உள்வீதி உலாவுடன் நிறைவுபெற்றது.

இந்த பூஜையில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ. ஆர். நடராஜா, தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள், நிர்வாக உறுப்பினர்கள், பொதுப் பணித்துறை ஊழியர்கள், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆனித்திருமஞ்சனம் மகா அபிஷேகத்தை திருமஞ்சனம் என்றும் சொல்லலாம். நமக்கு ஒரு வருடம். அதுவே தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி, காலைப் பொழுது மாசி, உச்சிக்காலம் சித்திரை, மாலைப்பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த ஜாமம் புரட்டாசி என்று கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில், சந்தியா காலங்களான ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.

ஸ்ரீநடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்ன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker