Latestமலேசியா

கோலா கோ பூர்வக்குடியினர் விவகாரம் ; எம்ஏசிசிக்கு புகார் கிடைத்துள்ளது !

கோத்தா பாரு, ஜூலை.11-   குவா மூசாங், கோலா கோ பகுதியைச் சேர்ந்த பூர்வக் குடியினர் குடியிருப்பில் தவறு – உழல் நிகழ்ந்திருக்க கூடும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) புகார் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆணையத்தின தலைவர் லத்தீப்பா கோயா உறுத்திப்படுத்தினார்.

இவ்விவகாரம் குறித்து ஆணையத்திற்கு புகார் கிடைத்துள்ளது உண்மை தான். ஆனால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் – உளவுத்துறை பணிகள் பாதிக்கும் என்பதால் இது குறித்த தகவல்களை இப்பொழுது வெளிப்படுத்தவோ விவாதிக்கவோ முடியாது.

இந்த புகார் தொடர்பாக ஆணையம் இன்னும் விசாரணை அறிக்கையை திறக்கவில்லை. அதே சமயத்தில் இந்த புகார் வழங்கியவர் குறித்த தகவல்களையும் என்னால் வெளியிட முடியாது என கிளாந்தான் மாநில செயலாளர் டத்தோ நஸ்ரான் முகமட் உடன் சந்திப்பு நடத்த கோத்தா பாருவில் உள்ள மாநில அரசு அலுவகத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

அண்மையில் மிக குறுகிய காலக்கட்டத்தில் அப்பகுதியில் வாழ்ந்து வந்த 15 பூர்வக் குடியினர் மரம நோயின் காரணமாக மரணமடைந்தனர். ஒரு வகை அம்மை நோயினால் அம்மரணங்கள் நிகழ்ந்தன என்றும் சந்தேகிக்கப்பட்டது.

அதே சமயம், அங்குள்ள ஆற்றுப் பகுதியில் தூய்மைக்கேடு ஏற்பட்டதால் தான் அங்குள்ளவர்கள் பாதிப்புற்று மரணமடைந்தனர் என்றும் சில தரப்பினர் போலீசில் புகார் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker