Latestமலேசியா

சட்ட விரோத ‘ஆன்லைன்’ சூதாட்டம் ; அறுவர் கைது !

கோலாலம்பூர், ஜூலை.11-  கூச்சாய் பகுதியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் சட்ட விரோத ‘ஆன்லைன்’ சூதாட்ட கும்பலைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டனர் என பிரிக்பீல்ட்ஸ் ஒசிபிடி துணை ஆணையர் ருஸ்லான் காலிட் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பிரிக்பீல்ட்ஸ் காவல் படையின் சட்ட விரோத சூது, ரகசிய குழுசெயல் தடுப்பு பிரிவினர்   நேற்று மாலை 5 மணியளவில் அந்த அடுக்குமாடி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கிருந்த 5 ஆண்களும் 1 பெண்மணியும் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் அனைவரும் இருபதின்ம வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். மேலும் இந்த சோதனையில் அவ்வீட்டிலிருந்து 2 கணினிகள், 5 மடிக் கணினிகள், 5 கைப்பேசிகள், 1 சிறு ரக “ரோவ்லெட்” சூதாட்ட கருவி, எண் பந்து கூண்டு ஆகிய பொருட்களும் கைப்பற்றப்பட்டன என அவர் விவரித்தார்.

இந்த ‘ஆன்லைன்’ சூதாட்ட கும்பலின் முழு நடவடிக்கையும் கண்டறிந்து முடக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கும்பல்கள் குறித்த தகவல் ஏதும் அறிந்தால் 03-22979222 என்ற எண்களில் பிரிக்பீல்ட்ஸ் காவல் துறை செயல்பாட்டி அறையை தொடர்பு கொள்ளலாம். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பர் என தாம் நம்புவதாகவும் ருஸ்லான் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker