Latestமலேசியா

சரவா ரிப்போர்ட் ஆசிரியர் மீது RM.100 மில்லியன் அவதூறு வழக்கை தொடுத்தார் மாபெல் முத்தையா!

கோலாலம்பூர், ஜூலை. 11- அட்டர்னி ஜெனரல் அலுவலக செயலகத்தின் முன்னாள் தலைமை பொறுப்பாளரான வி.மாபெல் முத்தையா, சரவாக் ரிப்போர்ட் ஊடகத்தின் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் புரவ்னுக்கு எதிராகl 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு நஷ்ட ஈடு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

நீதித்துறை நிர்வாகத்தின் உறுப்பினருக்கு எதிராக மிக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியதன் அடிப்படையில் கிளேருக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதாக மாபெல் முத்தையாவின் வழக்கறிஞர் டேவிட் குருபாதம் மலேசியாகினி இணைய ஊடகத்திடம் தெரிவித்தார்.

துணை பப்ளிக் பிராசிகியூட்டர் “கெவின் மொராய்ஸின் இரண்டாவது பிரேதப் பரிசோதனையை தடுப்பதற்கான ஒத்துழைப்பை அட்டர்னி அலுவலகம் எப்படி வழங்கியது? – சிறப்பு அம்பலம்” என்ற தலைப்பில் சரவாக் ரிப்போர்ட் 2015 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்திக் கட்டுரை கட்டுரை ஒன்றில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

மரணமடைந்த கெவின் மொராய்ஸின் இரண்டாவது பிரேத பரிசோதனையை தடுக்க அவரது உடலை தகனம் செய்வதில் துரிதமாக செயல்படும்படி கெவின் மொராய்ஸின் குடும்ப உறுப்பினருக்கு மாபெல் முத்தையா டெக்ஸ் செய்தி ஒன்றை அனுப்பி இருப்பதாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அவதூறுக்காக 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர் டேவிட் குருபாதம் கூறினார். இது தொடர்பில் மேலும் அவதூறுகளை செய்யாமல் தடுப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை கோருவதாகவும் ஏற்கனவே வெளியிட்ட செய்தியை சரவாக் ரிப்போர்ட் அகப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் நீதிமன்றத்தை தாங்கள் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

கிட்டத்தட்ட இந்த செய்தி வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது எதற்காக இந்த அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது? ஏன் இந்த கால தாமதம்? என்று நிருபர் கேட்டபோது கெவின் மொராய்ஸின் கொலை தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வந்த காரணத்தால் அப்போது இந்த அவதூறு வழக்கு நடவடிக்கையை தொடரப்பட வில்லை என்று டேவிட் குருபாதம் குறிப்பிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கெவின் மொராய்ஸ் கடத்தப்பட்டார். பின்னர் அவரது உடல் இரும்பு தோம்பில் அடைக்கப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கில் முன்னாள் ராணுவ மருத்துவர் மற்றும் 5 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கில் 100 மில்லியன் ரிங்கிட் வழக்கை தொடுத்திருக்கும் மாபெல் முத்தையா, பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கிறார் எனப்து குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker