Latestஉலகம்

தண்டனையாக மகனை காருக்குள் பூட்டிச் சென்ற தாய்

உட்டா, ஜூலை 11 – மாது ஒருவர் தனது குழந்தைக்குத் தண்டனை கொடுப்பதற்காக, அதனை காரில் தனியாக விட்டுச் சென்ற சம்பவம் அமெரிக்காவின் உட்டாவில் நடந்துள்ளது.

காரினுள் விடப்பட்ட நான்கு வயது சிறுவன், அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டான்.

தகவலைப் பெற்ற போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபின், கார் ஜன்னல்கள் இறுக்கமாக மூடியிருப்பதைக் கண்டனர். வியர்வை மற்றும் வெப்பத்தில் தவித்த அச்சிறுவன், இறுதியில் போலீசாரால் மீட்கப்பட்டான்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுவன் எத்தனை மணி நேரம் இத்தகைய நிலையில் விடப்பட்டார் என்பது போலீசாருக்குத் தெரியவில்லை.

மேலும், அவனது தாயார், ஜெசிகா லீ பிரவுன், 28, சிறுவனின் மோசமான நடந்தையால் தண்டித்ததாக கூறினார்.

அச்சிறுவனின் தாயார் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் புரிந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker