Latestஉலகம்

தீ விபத்தில் 8 மாதக் குழந்தை மரணம்

டென்னசி,  ஜூலை 11 –  அமெரிக்காவிலுள்ள டெட்டனிசி,  நாஷ்வெல்லி எனுமிடத்திலுள்ள வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 மாதக் கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததோடு மற்ற 5 பிள்ளைகள் காயமைந்துள்ளனர்.

கடந்த ஞயிற்றுக்கிழமையன்று நடந்த இவ்விபத்தின்போது, சம்பந்தப்பட்ட   குழந்தையின் தாய் தம்முடைய 6 பிள்ளைகளையும் வீட்டில் விட்டு விட்டு, தம்முடைய தோழியுடன் இரவு கேளிக்கை மையத்திற்குச் சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

23 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க அந்த இரு பெண்களும் இரவில் தம்முடைய வீட்டிலிருந்து வெளியாகியுள்ளனர் என ஃபொக்ஷ் செய்தித் தளம் வெளியிட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து நாஷ்வெல்லி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், வீட்டில் பிள்ளைகளைத் தனியாக விட்டுச் சென்ற அந்த மாது,  தம்முடைய பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள பணிப் பெண்ணை வேலைக்கு அமர்ந்தியிருந்தாரா என்பதுவும் விசாரிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது , அந்த வீட்டில் இருந்த 6 வயது பிள்ளை உதவிக்கு கூச்சலிட்டவாறு வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்துள்ளதாக  நபர் ஒருவர் காவல் துறையினரிடம்  தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தக் கூச்சல் சத்தத்தைக் கேட்ட அண்டை வீட்டார்,  தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள்,  வீட்டில் சிக்கிய மற்ற 4 பிள்ளைகளைக் காப்பாற்றியுள்ளனர்.

இதில் ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனது என்றும் தீயணைப்பு வீரர்கள் கூறினர். இவ்விபத்தில் காயமடைந்த பிள்ளைகள் அருகிலுள்ள  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker