Latestமலேசியா

நிஜத்தில் இல்லாத கடன் நிறுவனத்தை நம்பி 182, 340 வெள்ளியை இழந்த பெண் !

அலோர் ஸ்டார், ஜூலை.11-  நிஜத்தில் இல்லாத கடன் நிறுவனத்தை நம்பி பெண்மணி ஒருவர் மோசடி கும்பலிடம் 182, 340 வெள்ளியை இழந்துள்ளார் என கெடா மாநில போலீஸ் படையின் வர்த்தக குற்றப்பிரிவு தலைவர் அனுவார் அம்ரி தெரிவித்தார்.

24 வயதான அப்பெண்ணுக்கு கடந்த ஜூலை 2ஆம் தேதி ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் கடன் வழங்கும் நிறுவனத்தின்’ தொடர்பு அறிமுகமானது. 014-60366088 என்ற எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர் ஒருவன் தனது பெயர் கெண்ட் என்றும் தான் ஒரு கடன் நிறுவனத்தின் அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளான்.

‘கபே’ திறக்க எண்ணம் கொண்டிருந்த இப்பெண்ணுக்கு அந்த கடன் நிறுவனம் 250,000 வெள்ளி கடன் வழங்கவுள்ளதாக கூறியுள்ளான். அதனை நம்பி அப்பெண் கடனுக்கு விண்ணப்பம் செய்துள்ளார். பின்னர் 62033 என்ற எண்ணிலிருந்து விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளபட்டது என குருஞ்செய்தியையும் அப்பெண்மணி பெற்றுள்ளார்.

ஆனாலும் தமது கணக்கில் 250,000 வெள்ளி செலுத்தப்படுவதற்கு முன்னர்  செயல்முறை கட்டணமாக சில வங்கி கணக்கில் பணம் போடும்படி அந்நபர் பணித்துள்ளார். அவரின் பேச்சை நம்பி அப்பெண் தனக்கு வழங்கப்பட்ட 8 வெவ்வேறு வங்கி கணக்குகளில் 14 முறை பணம் செலுத்தியுள்ளார்.

இப்படி பல முறை பணம் செலுத்தி அவர் மொத்தமாக 182,340 வெள்ளியை இழந்துள்ளார். இந்த மொத்தப் பணமும் அவரின் சேமிப்பு மட்டுமின்றி நண்பர்களிடம் கடன் வாங்கியது என அனுவார் விவரித்தார்.

இறுதியாக இந்த கடன் வேண்டாம் என அப்பெண் முடிவு செய்த பின்னர், முன்னதாக அவர் செலுத்திய பணம் அனைத்தும் பேங்க் நெகராவில் முடக்கி விடப்படும் என கூறி அந்த நபர் மீண்டும் 25,000 வெள்ளி  கேட்டுள்ளார்.

இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மோசடி வழக்கு செக்‌ஷன் 420 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரை இது போல் 171 மோசடி சம்பவங்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் மக்கள் மொத்தமாக இழந்த பணம் 1.1 மில்லியன் வெள்ளியை எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker