Latestஇந்தியா

நீச்சல் மிதவைக்குள் குழந்தைகளை வைத்து ஊர்வலம் வந்த தாய்!

இல்லினாய்ஸ், ஜூலை 11 – தாய் ஒருவர், வாகனத்தின் கூரையில் நீச்சல் மிதவைக்குள், தனது குழந்தைகளை உட்கார வைத்தவாறு கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டார்.

49 வயதான ஜானஸ் யேகர், அமெரிக்காவின் இல்லினாய்ஸின் டிக்சன் நகரில் வாகனம் ஓட்டும் போது அந்தக் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தின்போது, ​​போலீசார் கூறுகையில், யேகர் நீச்சல் குளத்தின் மிதவையை  சுமந்து கொண்டு வாகனம் ஓட்டினார்.  மேலும் அவரது குழந்தைகளை வலுவாகப் பிடித்துக்  கொள்ளும்படி கட்டளையிட்டுள்ளார்.

‘டபிலியு.க்யு.எ.டி’ எனும் ஊடகத்துடன் பேசிய காவல்துறை அதிகாரிகள், யேகர் தனது நண்பரின் வீட்டிற் கு அந்நீச்சல் குள மிதவையை எடுத்துச் சென்றதாக கூறினர்.

இருப்பினும், அவர் தனது குழந்தைகளிடம் வீட்டிற்கு திருப்பிச் செல்லும்போது காரில் மேல் வைக்கப்பட்டிருக்கும் நீச்சல் மிதவையிலே அமர்ந்து வருமாறு பணித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker