Latestஉலகம்

நெகிழியினால் 9 மான்கள் இறந்த சம்பவம்

தொக்கியோ, ஜூலை11, ஜாப்பானிலுள்ள நாரா பூங்காவில் மோத்தமாக 9 மான்கள் நெகிழியை உண்டதால் இறந்துள்ளன என வனதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவமானது அந்தப் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூட இதற்கு காரணமாக இருக்கக் கூடும் என தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஜுன் வரையிலும் இறந்து போன மான்களின் வயிற்றைப் பரிசோதித்துப் பார்க்கையில், அவற்றின் வயிற்றில் திண்பண்டங்களின் பொட்டலங்கள் மற்றும் நெகிழிப் பைகளும்  காணப்பட்டதாக நாரா மான் பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்தது.

9 மான்களைப் பரிசோதிது பார்க்கையில்  அதில் ஒவ்வொரு மானின் வயிற்றிலும் ஏறக்குறைய 4.3 கிலோ கிராம் எடையுடைய நெகிழிகள் காணப்பட்டதைக் கண்டு தாங்கள் அதிர்ச்சிக்குள்ளாகியதாக  நாரா மான் பாதுக்காப்பு அறக்கட்டளையின் அதிகாரியான யோஷிதாகா அஷிமூரா தெரிவித்தார்.

ஜாப்பானில் மட்டும் சுமார் 1,000 மான்கள் உள்ளன என்றும் அவைகள்  சுற்றுலா பயணிகள் கொடுக்கும் திண்பண்டங்களுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்.

இதனையடுத்து, பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மான்களுக்கு முறுக்கு வகையை தவிர மற்ற திண்பண்டங்களை உணவாக கொடுக்க கூடாது என அஷிமூரா கூறினார். திண்பண்டங்களை மான்களுக்குக் கொடுப்பதால் மான்கள் அதனை உணவுப் பொருள் என கருதி நெகிழிகளை உட்கொள்ளுகின்றன.

இறந்து போன மான் தொடர்ந்து குப்பையில் வீசப்படும் நெகிழிகளை உணவு என்று சாப்பிட்டதால் அது இறந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker