Latestமலேசியா

பணம் தர மறுத்த தாயாரை “பாராங்” கத்தியால் மிரட்டிய மகன் !

கெபாலா பாத்தாஸ், ஜூலை.11-   தாம் கேட்ட பணத்தை தர மறுத்த சொந்த தாயாரை, ‘பாராங்’ கத்தியை கொண்டு இளைஞன் ஒருவன் மிரட்டியுள்ளான். இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் பெனாங்காவில் உள்ள அவர்களின் இல்லத்தில் நிகழ்ந்துள்ளது என வட செபராங் பிறை போலீஸ் தலைவர் துணை ஆனையர் நோர்ஸைனி முகமட் நூர் தெரிவித்தார்.

24 வயதாகும் அந்த இளைஞன் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் இது போல் மிரட்டல் சம்பவம் முன்னதாகவே பல முறை நிகழ்ந்துள்ளன என தெரிய வந்துள்ளது.

ஆனால் நேற்றைய சம்பவத்தில் முதல் முறையாக அந்த இளைஞன் ஆயுதத்தை வைத்து மிரட்டியுள்ளான். தாம் கேட்ட பணத்த தர தாயார் மறுத்ததை அடுத்து அவன் கடும் கோபம் அடைந்துள்ளான். பின் சமயலறையிலிருந்து ‘பாராங்’ கத்தி ஒன்றினை எடுத்து வந்து தாயாரை நோக்கி நீட்டி அவரை காயப்படுத்துவதாக மிரட்டல் விடுத்துள்ளான்.

தனது பாதுகாப்பு கருதி அம்மாது வீட்டை விட்டு வெளியேறி பின் இரவு 10.30 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் என அவர் விவரித்தார்.

சம்பவத்தில் அவன் பயன்படுத்திய கத்தியை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவத்தை குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 506 இன் கீழ் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே அந்த இளைஞன் வீட்டிலிருந்து தப்பியோடியதை அடுத்து போலீசாரால் தேடப்பட்டு வருகின்றான் என்றும் நோர்ஸைனி குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker