Latestஉலகம்

பாத்தாம் – பிந்தான் தீவுகளை இணைக்கும்  7 கிலோ மீட்டர் தூர கடல் பாலம் !

ஜக்கார்த்தா, ஜூலை.11- சிங்கப்பூர் அருகே உள்ள தனது இரண்டு தீவுகளை இணைக்கும் வகையில்   இந்தோனேசியா  நீளமான கடல் பாலத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் வழி  அந்நாட்டின் அண்டை மையத்துடனான வளர்ச்சியையும் வர்த்தகத்தையும் அதிகரிப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாத்தாம் – பிந்தான் எனும் இவ்விரு தீவுகளுக்கு இடையிலான பாலம் 7 கீலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது. மலேசிய ரிங்கிட் கணக்கின்படி சுமார் 1.1 பில்லியன் செலவில் இந்த பாலம் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என இந்தோனேசிய தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கு பயன்படும் வகையில் கப்பல் – உற்பத்தி மையமாக பாத்தாம் தீவினை மீண்டும் நிலை நிறுத்த இந்தோனேசிய அரசாங்கம் விரும்புகிறது. இந்த உருமாற்றம் 60 மில்லியன் டாலர் வரையிலான லாபத்தை ஈட்டி தரும் என அந்நாட்டு அதிபர் ஜொகொ விடோடோ கருத்துரைத்துள்ளார்.

இதன் அடிப்படையில் கட்டப்படவுள்ள பாலத்திற்கான பொறியியல் வடிவமைப்புகளை இந்தோனேசிய பொதுப்பணி துறை அமைச்சு ஆய்வு செய்து வருகின்றது. இவ்வருட இறுதிக்குள் அந்த ஆய்வு நிறைவு பெறும் என்றும் கூறப்படுகின்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker