Latestசினிமா

பிக்பாஸ் கமலஹாசனை கடுமையாக சாடிய இயக்குனர்!

சென்னை, ஜூலை .11- தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கடந்த மாதம் துவங்கியது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்புகளோ அதிகமாக பெருகி வருகின்றன .

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் கௌதமன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் திட்டித்த தீர்த்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அணியும் ஆடைகள் குறித்தும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பயன்படுத்தும் வசனம் குறித்தும் இயக்குனர் கவுதமன் குற்றம்சாட்டி உள்ளார்.

டிவி பேட்டியில் அவர் அறிவித்தது, ஜட்டியோடு பெண்கள் ஆண்களுடன் சுற்றுகிறார்கள் .உங்களது வீட்டில் இவ்வாறெல்லாம் சுற்ற முடியுமா! கை கால்களில் முடி தெரியும்படி பெண்ணின் ஆடையை ஆண்கள் அணிந்து கொள்வது எல்லாம் குடும்பத்துடன் பார்க்க முடியுமா?

இந்நிகழ்ச்சியை போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் அவர்கள் வசனங்கள் இரண்டு அர்த்தத்தைத் தாண்டி மூன்று அர்த்தங்களில் சென்று கொண்டிருக்கிறது என காட்டமாக கூறினார். மேலும் இதை மக்கள் எச்சரிக்கை விடுக்கும் முன் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனமே சரி செய்ய வேண்டும் .

இதுபோன்ற நிகழ்ச்சிகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இவரை எப்படி அரசியல் தலைமைத்துவத்தில் வைத்து பார்க்க முடியும் எனவும் சாடியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker