Latestமலேசியா

பிடிபிடிஎன் கடன் உள்ளவர்கள் இனி வீடு வாங்கலாம் ; சிறப்பு சலுகை அமல் !

கோலாலம்பூர். ஜூலை.11- பிடிபிடிஎன் கல்வி கடன் உள்ளவர்கள் வீடு வாங்குவதற்கு (முதல் முறை) சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுளதாக வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஸுரைடா கமால் தெரிவித்தார்.

அக்கல்வி கடன் கொண்டவர்கள் இனி வீடு வாங்க கடன் விண்ணப்பிக்கலாம். தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் (பி.டி.பி.டி.என்) மூலம் கல்வி அமைச்சிலிருந்து இந்த சிறப்பு விலக்கு அளிக்க எனது அமைச்சகம் ஒப்புதல் பெற்றுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவிருக்கும் “இளைஞர் வீட்டுக் கொள்கை”யில் இந்த செயல்பாடும் உள்ளடக்கப்படும்.

 

வீடுகளின் இறுதி நிதி தொகுப்புகளுக்கான தீர்வுகளைக் கண்டறியும் நேரத்தில் நான் இவ்விவகாரம் தொடர்பில் பிடிபிடிஎன் குழுமத் தலைவர் வான் சைப்பூள் வான் ஜானுடன் உரையாடினேன் என நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் விவரித்தார்.

இதற்கிடையே பிடிபிடிஎன் கல்வி கடன் கொண்டவர்கள் வீடு வங்குவதற்கு மட்டும் தான் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது தவிர இதர பொருட்கள் – உடமைகள் வாங்க வகை செய்யப்படவில்லை என்றும்  அமைச்சர் நினைவூட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker