Latestமலேசியா

பிரியாணி உணவகத்தில் அசுத்தம் – இரு வாரங்கள் மூட உத்தரவு

ஜோர்ஜ் டவுன், ஜூலை 11 – பினாங்கு, சூலியா ஸ்டிரீட்டில் இயங்கி வந்த பிரபல பிரியாணி உணவகத்தின் சமயலறையில் எலிகளின் எச்சமும் இறந்த பல்லியும் கிடந்ததன் காரணமாக இரு வாரங்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10இல், புதன்கிழமை அந்த உணவகத்தைச் சோதனையிட்ட சுகாதார அதிகாரிகள், சமயலறை சுகாதாரம் இல்லாமல் இருப்பதைக் குறிப்பிட்டு அந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

மூன்று நாள்களுக்குப் பின்னர், சுகாதார அதிகாரிகள் திரும்பவும் வந்து சோதனை இடுவர். திருப்தியாக இருந்தால், உணவகம் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

உள்ளூர் உணவு வகைகளுக்குப் பேர் போனதாகச் சொல்லப்படும் அந்த உணவகம் சுற்றுப்பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த உணவகம் மூடப்பட உத்தரவிடப்பட்டது இது இரண்டாவது முறை என்றும், கடந்தாண்டு ஜூலையில் அதே காரணத்துக்காக அது மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker