Latestமலேசியா

பேரரசர் தலைமையில் பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் தம்பதியினர் !

கோலாலம்பூர், ஜூலை. 11-   மாட்சிமை தாங்கிய பேரரசர் தம்பதியினர், பிரதமர்  தம்பதியினரின் பிறந்த நாள் முன்னிட்டு சிறப்பு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர். இந்த கொண்டாட்டம் இன்று “இஸ்தானா நெகாரா” அரண்மனையில் நடைபெற்றது.

பேரரசர் தம்பதியனருக்கு கூட்டரசு அரசு கட்டமைப்பின் சிறப்பு விருதுகள் இன்று வழங்கப்பட்டன. அந்த விருதுகளை அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் துன் மகாதீர் அவர்களுக்கு வழங்கினார்.

அப்பொழுது இன்ற பிரதமர் தம்பதியினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பேரரசர் இந்த கொண்டாட்டத்தை வழங்கினார். துன் மகாதீருக்கு நேற்று தனது 94ஆவது பிறந்த நாளை கொண்டாடினர். அவரின் துணைவியார் துன் சித்தி ஹஸ்மா நாளை தனது 92ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

எனவே இருவருக்கும் சேர்த்து இன்று பேரரசர் தம்பதியினர் முன்னிலையில் பிரதமர் தம்பதியினர்  கேக் வெட்டினர். அந்த கேக்கில்  பிரதமருக்கு பிடித்த புத்தகங்கள், அவரின் துணைவியாருக்கு பிடித்த வயலின் இசைக்கருவி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் அரசாங்க தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் இஸ்மயில் பாக்கார், அரச முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சைட் டேனியல் சைட் அகமட், பகாங் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker