உலகம்

பேஸ்புக்கிலிருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள்:- ஆப்பிள் இணை நிறுவனர் !

வாஷிங்டன், ஜூலை.11-மக்களை பேஸ்புக் பீதியில் இருந்து நிரந்தரமாக வெளியேறுமாறு ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் கோரிக்கை விடுத்துள்ளார் .

பேஸ்புக் உள்பட அதன் கீழ் இயங்கும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் மக்களின் தகவல் தனி உரிமை மீறுகின்றனவா என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து 68 வயதான ஸ்டீவ் வோஸ்னியாக் அமெரிக்காவின் வாஷிங்டன் விமான நிலையத்தில்  ஊடகவியலாளரிடம் மேலும் தெரிவிக்கையில், பல தரப்பு மக்கள் உள்ளனர் .மேலும் சிலருக்கு பேஸ்புக்கின் நன்மைகள் மற்றும் தனி உரிமை இழைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

பேஸ்புக் உள்ளிட்ட உரையாடல்களை ஒட்டுக் கேட்பது வருத்தமளிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். பேஸ்புக்கை விட்டு மக்கள் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் இதன் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயனாளிகள் தங்களுக்கு தனி உரிமை இருப்பதாக நினைக்கிறார்கள். குறுஞ்செய்திகள் அனுப்ப எனக்கு விருப்பமான விஷயம் பொதுவாக எல்லோருக்கும் விருப்பமான ஒரு விஷயம் .ஆனால் இதில் உள்ள விபரீதத்தை எவரும் அறிவதில்லை.

கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பயனாளிகளின் தகவல்கள் செய்ததாக பெரிய கருத்தை எழுந்ததையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் தனியுரிமை கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது மேலும் மக்கள் தங்கள் பேஸ்புக் கணக்குகளை அழித்துவிட வேண்டும் என பலரும் அறிவுறுத்தி உள்ளனர் .

இந்த குரல்களுக்கு ஆதரவாக இருந்த முக்கியமானவர்களில் ஒருவரான ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல் அவர் கடந்த ஏப்ரல் 2018 தனது பேஸ்புக் கணக்கை நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker