Latestசினிமா

“பொன்னியின் செல்வன்” ரஜினி மகளுக்கு பதிலடி :- மணிரத்னம்!

சென்னை,ஜூலை,11- கல்கியின் பிரசித்தி பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று உறுதியான முடிவை எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

இப்படத்தில் மிக விரைவில் முன்னாள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் முடிவையும் எடுத்துள்ளார் .

சோழ மன்னர்களின் வரலாற்றை பின்னணியாக கொண்டு எழுத்தாளர் கல்கியால் 15 பாகங்களாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கப் போவதாக எம்ஜிஆர் தொடங்கிய கமல் வரை ஆசைப்படாத சினிமா பிரபலங்களை இல்லை .

இந்த நாவலை படமாக்கும் அறிவிப்பு வராத ஆண்டுகள் சினிமாவில் இல்லை என சொல்லலாம். இதன் தொடர்ச்சியாக சுமார் 10 ஆண்டுகளாக இயக்குனர் மணிரத்னம், கமல் தொடங்கி அரவிந்தசாமி, விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோருடன் சில இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களையும் இணைத்துக்கொண்டு மிக விரைவில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கப் போவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு ரஜினியின் மகள் சௌந்தர்யா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பொன்னியின் செல்வன் நாவலை சீரியலாக தயாரிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு டீசரையும் வெளியிட்டார். அந்த அறிக்கையால் சற்று கடுப்பான  மணிரத்னம் தற்காலிகமாக அமைதி காத்தார்.

அந்த அமைதி தற்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது .ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்தில் வியாபாரத்தை சௌந்தர்யாவின் பொன்னியின் செல்வன் ஆனால் எதுவும் செய்ய முடியாது  என்றும் எனவே படத்தை இயக்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை  என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனை அவரது நண்பர்கள் வட்டாரமும் படத்தை தயாரிக்க இருக்கும் லைகா நிறுவனமும் நம்பிக்கை ஊட்டியதை ஒட்டி மணிரத்னம் திரைக்கதையை மீண்டும் தூசு தட்ட ஆரம்பித்து விட்டாராம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker