Latestமலேசியா

மாஸ் நிறுவனத்தை வாங்க கத்தார் ஏர்வேய்ஸ் முயற்சி! நிறைவேறுமா திட்டம்?

கோலாலம்பூர், ஜூலை. 11- மலேசிய ஏர்லைன்ஸ் பெர் ஹாட் நிறுவனத்தை ஏற்று நடத்துவது தொடர்பான ஆலோசனைக் திட்டத்தை அனுப்பியிருக்கும் ஒரே வெளிநாட்டு நிறுவனம் கத்தார் ஏர்வேஸ் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மத்திய கிழக்கு விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திடம் மாஸ் நிறுவனத்தை நடத்துகின்ற அளவுக்கு போதுமான நிதி பலம் இருக்கிறது என்ற போதிலும் அந்நாடு அனைத்துலக அரங்கில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கிறது என்று விமானப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அதே வேளையில் மாஸ் விமானத்தை ஏற்று நடத்துவதற்கான வாய்ப்பை கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு அரசாங்கம் வழங்குவதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்றும் கூறப்படுகிறது.

காரணம் அந்த நாடு எதிர்நோக்கி இருக்கும் அரசியல் சூழல்கள் மற்றும் அதன் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஆகியவை காரணமாக கருதப்படுகின்றன என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக மலேசியா மற்றும் புருணைக்கான கத்தார் ஏர்வேய்ஸ் நிறுவன நிர்வாகி முஷாம்மில் முகம்மட் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

கடந்த ஆண்டில் மலேசியாவுக்கு வருகை புரிந்திருந்த கத்தார் மன்னர் ஷேக் தாமிம் ஹமாத் அல் தானி, பிரதமர் துன் மகாதீர் சந்தித்துப் பேசினார் அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீட்டு திட்டங்கள் குறித்து அவர் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மலேசியாவின் 3ஆவது தேசிய கார் திட்டத்திலும் முதலீடு செய்ய கத்தார் முன்வந்ததாக தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker