Latestமலேசியா

ரனியா ஸாரா நியமனம் ; மறுபரிசீலனை தேவையில்லை !

கோலாலம்பூர், ஜூலை.11-  சிசிஎம் எனப்படும் தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினராக  திருநங்கையான ரனியா ஸாரா மெடினா நியமிக்கப்பட்டது குறித்து சுகாதார அமைச்சு மறு பரிசீலனை செய்ய வேண்டியதில்லை என அத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் கருத்துரைத்தார்.

முந்தைய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் படி அனைத்து சட்ட திட்டங்ளுக்கும் உட்பட்டு தான் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே அதனை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னாள் அழகு ராணியான ரனியா ஏய்ட்ஸ் நோய் ஒழிப்பு சம்பந்தப்பட்ட இக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை சுகதாரத் துறை துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சீ அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்த நியமனத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன . பலரும் இந்த நியமனம் குறித்து அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker