Latestஉலகம்

(வீடியோ) : ரயில் பயணித்திற்காக சேவலைக் கொன்ற பெண்! 

சீனா, ஜூலை 11 – நம்மில் பலர் பயணம் மேற்கொள்ளும் போது சில பொருள்களை எடுத்துக் கொண்டு போக அனுமதி கிடையாது.

அதிலும், கொஞ்சம் கூர்மையான  பொருளோ, உணவோ கொண்டு செல்ல அனுமதி  இல்லை. அப்படி கொண்டு போனாலும் அங்கிருக்கும் பாதுகாவலர்கள் அவற்றை பறிமுதல் செய்து கண்டிக்கவும் செய்வர்.

அது போன்று சீனாவில் உயிரினங்களை ஏற்ற நிச்சயம் அனுமதி கிடையாது. அப்படி இருக்கையில், ஒரு பெண்மணி சேவலை இரயிலில்    கொண்டுவர  முயற்சித்த போது அங்கிருந்த பாதுகாவலர்  தடுத்துள்ளார். அந்த மாதுவானவர் அந்த பிரச்சினையைக் கையாண்ட விதமோ நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

அந்த சேவலை சம்மந்தப்பட்ட தரப்பினரிடமோ, வெளியிலோ விடுமாறு கூறியுள்ளனர். அதற்கு அப்பெண் அருகில்  இருக்கும் குப்பைத்  தொட்டியில், அந்த சேவலின் குரல்வளையை நெரித்துக் கொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

உயிரற்ற நிலையில், சமைக்கும் உணவு பொருளாகக்  கொண்டு போகலாம் என்பதற்காக அவர் சேவலைக் கொன்று, சமைத்த பின்னர் அதைக் கொண்டு போகலாம் என கையாண்ட யுக்தியோ உலக மக்களின் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker