Latestமலேசியா

2 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி மாண்டனர்

கங்கார், ஜூலை 11,  ஆராவ், கம்போங் ஜெலெம்போக்லுள்ள சுங்கை புலாவில் உறவினரோடு மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் ஆற்றில் விழுந்து மாண்டனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இச்சம்பவத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட முகமட் ஃபாரிஸ் மிகாயில் (வயது 9) மற்றும் முகமட் சியாட் அஸ்சி சாகி (வயது 8) ஆகியோரின் உடலகள் மீட்கப்பட்டன.

சம்பவத்தன்று, மீன் பிடிக்க உறவினரோடு சென்றிருந்த முகமட் ஃபாரிஸ் கால் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளான், ஆற்றில் விழுந்த முகமட் ஃபாரிஸை காப்பாற்ற முயன்ற முகமட் சியாட் அஸ்சினும் தாடுமாறி ஆற்றில் விழுந்துள்ளான்.

இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட சிறுவர்களின் உறவுக்காரரான முகமட் அய்மான் அக்மால் கைரி மோக்சானி (வயது 17) விசாரித்தபோது, உறவினர் ஒருவருடன் மீன் பிடிக்க சென்ற இச்சிறுவர்கள் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டது அந்த உறவினர் உணரவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த முகமட் அய்மான் ஆற்றில் குதித்து சிறுவர்களைத் தேடியுள்ளார் என அவர் கூறினார். சில மணி நேர தேடல் போராட்டத்தில் அச்சிறுவர்களின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது என கவலையுடன் கூறினார்.

அவர்களின் இறப்பு எங்கள் குடுப்பத்திற்கு ஒரு பெரிய இழப்பு என்பதையும் தெரிவித்துக் கொண்டார். சிறுவர்களின் உடல்கள் துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker