Latestமலேசியா

6 வயது சிறுமியை “மஸ்கராவால் ” (mascara) மர்மப்பகுதியில் குத்திக் கொடுமை! 

சரவாக், ஜூலை 11 – சமீபத்தில் சிறுமி ஒருத்தி தன் உறவினரின் அழகு சாதன பொருட்களை வைத்து விளையாடியுள்ளாள். ஆத்திரமடைந்த அச்சிறுமியின் உறவினர் தண்டனையாக அவளின் உள்ளாடையை கழற்றி ‘மஸ்கராவால்’ அவளின் மர்மப் பகுதியில் பலமுறை குத்திக் காயம் விளைவித்துளார்.

அச்சிறுமியின் பாட்டி அவளைக் குளிப்பாட்டுகையில், அப்பகுதியில் ரத்தம் கசிந்து வீக்கமடைந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விசாரிக்கையில்தான், அந்தக் கொடூர சம்பவம் அம்பலமானது.

பிந்துலு மருத்துவமனையில்  அச்சிறுமி  சிகிச்சை பெற்றுவரும் வேளையில், அந்த உறவினர் மீது புகார் கொடுக்க அவளின் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker