Latestசினிமா

இயக்குனர் ஏ.எல்.விஜய்- டாக்டர் ஐஸ்வர்யாவை மணம் முடித்தார்! 

சென்னை,ஜூலை.12- பிரபல இயக்குனரும் நடிகை அமலாபாலின் முன்னாள் கணவருமான ஏ.எல் விஜய்க்கும் டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் எளிமையான முறையில் நேற்று திருமணம் நடந்தேறியது.

அமலா பாலிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின் தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதில் செலுத்தி வந்தார். இந்நிலையில் இவர் மருத்துவர் ஐஸ்வர்யாவுடன் நேற்று கைக் கோர்த்தார்.

சமூக வலை தளத்தில் கடந்த 29ம் தேதி இச்செய்தியினை ஏ. எல் விஜய் தெரிவித்திருந்தார் .மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வர் என அறிவித்திருந்தார் .தொடர்ந்து நேற்று இவருடைய திருமணம் எளிமையாக முறையில் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்று முடிந்ததும் மணமக்கள் இருவரும் பெற்றோருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இவர்களுக்கு பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் தங்களுடைய வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker