Latestசினிமா

ஏ.எல் விஜய்யுடன் விவாகரத்தான போது அமலாபால் சொன்னது இதுதான்!

சென்னை,ஜூலை.12- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலாபால். இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது .காதல் திருமணம் தான் என்றாலும் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்து குறித்து நடிகை அமலாபால் கூறுகையில், 18 வயதில் சினிமாவில் அறிமுகமான எனக்கு 23 வயதில் திருமணம் நடந்தது .ஆனால் 24 வயதில் இருவரும் பிரிந்து விட்டோம். அப்போது எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லை என் தவறுகள் மூலமாகவே எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டேன்.

எனது பிரிவுக்குப் பிறகு நான் அழுதேன் எனினும் இவற்றை எல்லாம் ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டேன். இயக்குனர் விஜயை இன்னுமும் காதலிக்கிறேன். எப்போதும் அந்த காதல் இருக்கும் .அவர் எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான். அதே நேரத்தில் பிரிவும் காதல்தான். யாரும் பிரிவதற்காக திருமணம் செய்ய மாட்டார்கள்.

இருவரும் பிரிவது குறித்து எடுத்த முடிவு என் வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒன்று தான். வாழ்க்கையில் எதையும் யாராலும் கணிக்க முடியாது .விஜய்யை திருமணம் செய்தது தவறான முடிவா என்று என்று கேட்டால் இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

எனது திருமணம், நான் யார் என்பதும் யாராக இல்லை என்பதையும் உணர்த்தி உள்ளது .இப்போது தான் எனக்கு புரிகிறது நான் தவறான வயதில் திருமணம் செய்து கொண்டேன். இந்தத் தோல்வியால் நான் ஒருபோதும் உடைந்து போகவில்லை .இந்தத் தோல்வியிலிருந்து நான் வெளியில் வருவேன்.

நான் யாருக்கும் தவறான முன்னுதாரணமாக இருக்க கூடாது என் விவகாரத்தை தொடர்ந்து எனக்கு என் குடும்பத்தினர்தான் ஆறுதலாக இருந்தார்கள்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker