Latestசினிமா

காரிலிருந்து நடிகையை வெளியே இழுத்து தள்ளிய டிரைவர்! 

கொல்கத்தா, ஜூலை, 12- வாடகை கார் ஒன்றில் பயணம் செய்த நடிகையை டிரைவர் திடீரென்று வெளியே இழுத்து தள்ளினார். இச்சம்பவத்தை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வங்காள மொழி படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் சுவஸ்திகா தத்தா.தன்னை காரிலிருந்து டிரைவர் இழுத்து வீசிய சம்பவம் பற்றி தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது எனது வீட்டிலிருந்த படப்பிடிப்புக்காக கொல்கத்தா பகுதியில் உள்ள சினிமா ஸ்டூடியோ செல்வதற்கு தனியார் வாடகை கார் ஒன்றை புக் செய்தேன்.ஜாம்ஷெட் என்ற டிரைவர் அழைத்துச் சென்றார்.

ஆனால் நடுவழியிலேயே அந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு எனது புக்கிங்கை ரத்து செய்துவிட்டு காரில் இருந்து என்னை இறங்க கூறினார். படப்பிடிப்புக்கு நேரமானதால் காரில் இருந்து இறங்க மறுத்தேன்.

இதையடுத்து டிரைவர் காரை திருப்பி எனது வீடு உள்ள பகுதியில் கொண்டு வந்து நிறுத்தினார் .பிறகு காரில் இருந்து இறங்கி வந்த டிரைவர் என்னை காரிலிருந்து வெளியே இழுத்து தள்ளினார். எனக்கு கோபம் வந்தது. அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். உடனே டிரைவர் என்னை மிரட்டி விட்டு, ‘உன்னால் என்ன முடியுமோ செய் ,நீ என்ன செய்கிறாய் என்று பார்த்து விடுகிறேன்’ என்று மிரட்டல் தொனியில் பேசி விட்டுச் சென்றார்.

படக்குழுவினர் ஸ்டூடியோவில் காத்திருந்ததால் நான் உடனே செல்ல வேண்டியிருந்தது. எனது தந்தைக்கு நடந்த சம்பவம் பற்றி கூறி சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மேற்கொள்ளும்படி தெரிவித்தேன்.

இதனை பேஸ்புக்கில் நடிகை வெளியிட்ட தகவலை கொல்கத்தா போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் நடிகைக்கு மெசேஜ் அனுப்பினர். அதில் உங்களுடைய புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். மேற்கொண்டுசம்பந்தப்பட்ட டிரைவரை கைது செய்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker