Latestமலேசியா

சிங்கையில் கருணை மனு நிராகரிப்பு; மரணத்தை எதிர்நோக்கும் 4 மலேசியர்கள்!

கோலாலம்பூர், ஜூலை. 12- சிங்கப்பூர் அதிபரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது தொடர்ந்து சாங்கி சிறைச்சாலையில் இருந்து வரும் நான்கு மலேசியர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.

கருணை மனு நிராகரிக்கப்பட்டு இருப்பதானது, இவர்கள் நால்வரும் எந்த சந்தர்ப்பத்திலும் தூக்கிலிடப்படலாம் என்று அறிகுறியை காட்டுவதாக லாயர்ஸ் ஃபார் லிபர்டி அமைப்பின் ஆலோசகர் என்.சுரேந்திரன் கூறினார்.

பொருளைப் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கே. தட்சிணாமூர்த்தி ஏ.கோபி அப்துல் ஹெல்மி அப்துல் ஹலீம் மற்றும் ரஹ்மான் என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட ஒருவர் உட்பட இந்த நால்வரும் தண்டிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்களுடன் சேர்த்து 10 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனு கடந்த வாரத்தில் சிங்கப்பூர் அதிபரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர் சுரேந்திரன் சொன்னார்.

சிங்கப்பூரை பொறுத்தவரை கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டால் பின்னர் வெகு விரைவில் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த வாரத்தில் மட்டும் 10 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. ஒரே சமயத்தில் இத்தனை பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும் என குறிப்பிட்ட சுரேந்திரன், கருணை மனு நிராகரிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக பலரை தூக்கிலிடுவதற்கான பணியில் சிங்கப்பூரில் ஈடுபடக் கூடும் என சுரேந்திரன் அச்சம் தெரிவித்தார் மேலும் அண்மையில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையின்படி பார்த்தால் செய்திகள் மற்றும் குறிக்கப்படுவது போல் தோற்றம் தருகிறது என சுரேந்திரன் குற்றம் சாட்டினார்.

புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது மலேசியர்கள் விஷயத்தை நாங்கள் எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்? ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் தண்டனையை சிங்கப்பூர் அரசாங்கம் நிறைவேற்றக்கூடாது என வெறுமனவே கோரிக்கை விடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று அமைச்சர் கே.சண்முகம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மலேசியர்களின் சார்பில் சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை நடத்த மலேசிய அரசாங்கம் முன்வரவேண்டும் என்று சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker