Latestசினிமா

சினிமாவிலிருந்து வடிவேலுவை முடக்க முடிவெடுத்த இயக்குனர்!

சென்னை,ஜூலை.12- கமல்ஹாசனின்  இந்தியன் 2 மீண்டும் துவங்க உள்ள நிலையில் இம்சை அரசன் வடிவேலுக்கு இச்செய்தி இடியாய் இறங்கியிருப்பதாகவும் இதனால் மனிதர் பயங்கர அப்செட் ஆகி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சில பல பஞ்சாயத்துகளுக்கு பின் இந்தியன் 2 படம் மறுபடியும் துவங்கவிருப்பதையும் அதற்கான முன்னெடுப்பில் கமல் மும்முரமாக இருப்பதாகவும் ஏற்கனவே வந்த தகவல்தான்.

இந்த இணைப்பின் மூலம் தனது மற்றும் லைகா நிறுவனத்தின் நீண்டகால தலைவலியான இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பட பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர் .

லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தில் தன்னிடம் மிக கெடுபிடியாக நடந்து கொண்டதற்கு காரணமே தனது நிறுவனத்தின் மூலம் லைகாவுக்கு  தயாரித்து தருவதாகச் சொன்ன 24ம் புலிகேசியின் பட தயாரிப்பின்  பணம் மொத்தமாக முடங்கியது தான் என்று சங்கர் உறுதியாக நம்புகிறார்.

இப்பிரச்சினையை இன்னும் தயாரிப்பாளர் நடிகர் சங்கங்களின் மூலம் துரத்தினால் அது அவ்வளவு லேசில் முடிவுக்கு வராது .எனவே இனி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வடிவேலுவை முடக்க வேண்டும் என்று சங்கர் முடிவெடுத்து விட்டார் என்கிறார்கள். அப்படி நடந்தால் ஏற்கனவே மூன்று வருடங்களாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் வடிவேலு நிரந்தரமாக முடங்கிவிடுவார் என்று நம்புகிறார் ஷங்கர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker