Latestமலேசியா

தன்முனைப்பு உரையில் சமய பிரச்சாரமா? – கல்வி அமைச்சு

கோலாலம்பூர், ஜூலை 12 –  கடந்த மாதம் கூலிம் பள்ளி ஒன்றில் தன்முனைப்பு பயிற்சியின்போது, சமய பேச்சாளர் ஃபிர்டாவுஸ் வோங் என்பவர் சமய பிரச்சாரம் எதனையும் செய்யவில்லை என கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

லூனாஸ் இடைநிலைப் பள்ளி ஃபிர்டாவுஸை தன்முனைப்பு உரை நிகழ்த்த அழைத்திருந்ததாகவும் அவர் தமது சமய உரையில் சமயப் பிரச்சாரம் எதனையும் செய்யக்கூடாது என்ற உத்தரவாதத்தின் பேரில் உரை நிகழ்த்தினார்,  அதில் எந்த சமய பிரச்சாரமும் செய்யவில்லை என அது குறிப்பிட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை, பினாங்கின்  இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி, அந்தப் பிரச்சாரத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் அழைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனிடையே, அந்தத் தன்முனைப்பு பிரச்சாரம் சம்பந்தமாக  ஃபிர்டாவுஸ் தமது முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அதில், ஜூலை 4ஆம் தேதி லூனாஸ் இடைநிலைப் பள்ளியில்  படிவம் 1,2 மாணவர்களிடையே உரையாளர்கள்  பேசினர் என்றும் அதில், சீன மாணவர்கள் ஒரு குழுவாகவும் மலாய் மற்றும் இந்திய மாணவர்கள் ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டு சமய பிரச்சாரம் செய்யப்பட்டது.  தாங்கள் பணத்துக்காக அதனைச் செய்யவில்லை மாறாக மதத்தை பரப்பும் நடவடிக்கையில் திருப்தி கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker