Latestசினிமா

தப்பியோட முயன்றதால் அந்த நைஜீரியரை கைது செய்தோம் ! – குடிநுழைவு இலாகா தகவல்

கோலாலம்பூர், ஜூலை.11-   நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒர்ஹியோன்ஸ் எவன்சிஹா தோமஸ் எனபவர்  குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் தப்பி ஓட முயன்றதால் கைது செய்யப்பட்டார் என குடிநுழைவு இலாகாதலைமை இயக்குனர் டத்தோ கைரூள் ஸைமி டாவுட் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 4ஆம் தேதி, கோலாலம்பூர், டேசா ஆமான் பூரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இச்சோதனையில் 20 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்பகுதியில் போதைப் பொருள் பயன்பாடு, விபச்சாரம் போன்ற தீய செயல்களினால அமைதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது  என அங்குள்ள உள்ளூர் குடியிருப்புவாசிகள்  ஆப்பிரிக்க பிரஜைகள் மீது புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து சில வெளிநாட்டினர் தப்பியோட முயற்சித்தனர். அதில் மரணமடைந்த நபரும் அடங்குவார். ஆனாலும் அவரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட பின்பு அவரின் கடப்பிதழ் ஆவணங்கள் அனைத்தும் முறையாக உள்ளது தெரிய வந்தது. இருந்தாலும் முந்தைய செயல்ப்பாடுகள் ( தப்பியோட முயன்றது) சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார். அன்றைய சோதனையில் கைது செய்யப்பட்ட அனைவரும் முதலில் கோலாலம்பூர் குடிநுழைவு துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அப்பொழுது எவன்சிஹா தனக்கு நோய் ஏதும் உள்ளதை அங்கு குறிப்பிடவில்லை. அவரின் தொடைப்பகுதியில் ஏற்கெனவே இருந்த காயத்திற்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் ஜூலை 5 தேதி கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் புக்கிட் ஜாலில் உள்ள டிப்போவிற்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையே,  ஜூலை 9ஆம் தேதி அதிகாலை 12.05 மனியளவில் றவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் காவல் அதிகாரியிடம் தெரிவித்தனர். உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாலை 12.30 மணியளவில் அங்கு வந்த எச்.யு.கே.எம் மருத்துவமனை தரப்பினர், எவன்சிஹாறவை பரிசோதித்து இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர். த இது தொடர்பில் போலீஸ் புகார் வழங்கப்பட்டுள்ளது என டத்தோ கைரூள் ஸைமி விவரித்தார்.

குடிநுழைவு இலாகா இந்த மரண சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய சவப்பரிசோதனை முடிவுகளுக்காக  காத்திருக்கின்றது. முடிவு வந்த பின்னரே இது குறித்து தகவல் ஏதும் கூற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறந்த எவன்சிஹா, லிம் கொக் வேங் பல்கலைக்கழகத்தில் நிர்வாக துறையில் பிஎச்டி கல்வி பயின்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker