Latestமலேசியா

நைஜீரிய மாணவன் மரணம் ; பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்து – பாதுகாப்பு ஏற்பாடு !

சிரம்பான், ஜூலை.11-  மலேசியாவில் உள்ள உயர்க்கல்வி கூடத்தில் பிஎச்டி கல்வி பயின்று வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர், குடிநுழைவு மையத்தில் இறந்து விட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒர்ஹியோன்ஸ் எவன்சிஹா தோமஸ் எனும் அந்த மாணவனை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தவறாக கைது செய்துள்ளனர். அவர் முறையான கடப்பிதழ் ஆவணங்களை கொண்டிருந்த போதிலும்  கைது செய்யப்பட்டு ஜாலான் டூத்தாவில் உள்ள மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அதிகாரிகள் அவரது ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருந்த வேளையில் அந்த மாணவர் மரணமடைந்தார் என அச்செய்தியில் தகவல் உள்ளது.  நேற்று சில நைஜீரிய நபர்கள் ஜாலான் அம்பாங்கில் உள்ள அந்நாட்டு தூதரகத்தின் முன்பு மறியலில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் தனது மாணவன் ஒருவன் இறந்து விட்டதாக லிம் கொக் வேங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இத்தகவல் அப்பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நைஜீரியா நாட்டு ஊடகம் குறிப்பிட்ட மாணவனின் பெயரும் லிம் கொக் வேங் பல்கலைக்கழகம் குறிப்பிட மாணவனின் பெயரும் சமமாக உள்ளது. ஆனால் அப்பல்கலைக்கழகத்தின் பதிவேற்றத்தில் மாணவனின் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

மாறாக அவன் நிர்வாக துறையில் பிஎச்டி கல்வி பயின்று வந்தான்.  பிற மாணவர்களுக்கு அம்மாணவன் சிறந்த முன் உதாரணமாக திகழ்ந்தான் என்ற தகவல்களுடன்  அப்பல்கலைக்கழக நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பில் அப்பல்கலைக்கழகத்தில் இன்றைய வகுப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. வரும் திங்கட்கிழமை மீண்டும் வகுப்புகள் வழக்கம் போல் தொடரப்படும் என அறிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பில் சைபர்ஜெயாவில் உள்ள அப்பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் காவல் துறையினர் கண்காணிப்பு – பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க அங்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker