Latestஉலகம்

பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச வார்த்தை:-பாடகர் மீது நடவடிக்கை! 

பஞ்சாப் ,ஜூலை.12- சமீபகாலமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் இருப்பதாக மகளிர் அமைப்பினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தமிழில் ‘அடிடா அவள- எவண்டி உன்ன பெத்தான்- லூசுப்பெண்ணே போன்ற பாடல்களில் இடம் பெற்ற வரிகளுக்கு மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான ஆபாச வார்த்தைகளை பாடலில் பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல பஞ்சாபி பாடகர் ஹனி சிங். இவர் இந்தி படங்களிலும் பல பின்னணி பாடல்கள் பாடியுள்ளார் .சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சமீபத்தில் மக்னா என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார் ஹனி சிங். இந்த ஆல்பத்தில் பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த ஆணையத்தின் தலைமை மனிஷா கூறும்போது அயல் நாடுகளில் ‘ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா’ என்று கோஷமிடுகின்றனர். ஆனால் இங்கே பெண்களைப் பற்றி கேவலமாக பாடி இருக்கின்றனர். இவரின் ஆபாச ஆல்பத்தை அனுமதிக்கக்கூடாது. மாநில அரசு தடை விதிக்க வேண்டும் என கூறி உள்ளார் .ஹனி சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker