Latestமலேசியா

மாணவர் இறந்த சம்பவம் ; பரிசோதனை நேரத்தில் பேருந்து சாலைக்கு ஏற்றதாக இருந்தது !

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.11- 6ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கீழே விழுந்து இறந்த பள்ளிப் பேருந்து முன்னதாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது சாலைக்கு ஏற்றதாக தான் இருந்தது என வாகன பரிசோதனை ஆணையமான புஸ்பாகோம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அண்மையில் கிளந்தான், மாச்சாங் பகுதியில் பயணத்தில் இருந்த பள்ளி பேருந்து ஒன்றின் படிக்கட்டு தரைப்பகுதி உடைந்ததால் நவான் முகமட் ஆடாம் எனும் அந்த மாணவர் கீழே விழுந்து மரணமுற்றார்.

அந்த பேருந்து கடந்த மே மாதத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அதன் பாகங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் உரிமம் வழங்கப்பட்டது.

அந்த பேருந்து விதிமுறைகளை பின்பற்றி அதிகரிகளால் முறையாக  பரிசோதிக்கப்பட்டதை பிரத்யேக செயலியில் பதிவான புகைப்படங்கள் வழி உறுதி செய்தோம் என்றும் புஸ்பாகோம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை  26,000க்கும் மேல் பள்ளி பேருந்துகள் சோதனை மேற்கொள்ளப்பட்டன என்பது தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த 26,000 பரிசோதனைகளில் 28 விழுக்காடு அல்லது 7,300க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் விதிமுறைகளை பின்பற்றுவதில் தோல்வி கண்டுள்ளன.

எனவே இவ்விவகாரத்தில் தேவையற்ற அவதூறுகளை பரப்பி குழப்பம் விளைவிப்பத்தை சில தரப்பினர் நிறுத்திக் கொள்ளவேண்டும். இது குறித்து காவல் துறை விசாரனை மேற்கொள்ள வேண்டும்.

அதே சமயம் 1987 சாலை போக்குவரத்து சட்டத்திற்கு கட்டுப்படாத வாகனங்கள் விவகாரத்தில் ஒருபோதும் சமரம் செய்துக்கொள்ளப்போவதில்லை என புஸ்பாகோம் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker