Latestஉலகம்

முதலுதவிக்குப் பின்னர் உயிர்பிழைத்த பூனை

மாஸ்கோ, ஜூலை 12,   பண்டார் தோம்ஸ்சில் நடந்த தீவிபத்தில் சிக்குண்ட பூனையின் உயிரைக் காப்பற்றுவதற்காக தீயணைப்பு வீரர் ஒருவர் சுவாச காற்று முகமூடியின் உதவியுடன் பூனையை மீண்டும் பிழைக்கச் செய்துள்ளார்.

இரட்டைமாடி கொண்ட பலகை வீட்டில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைக்கப்பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள்,  தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

அதில் ஒரு தீயணைப்பு வீரர் வீட்டில் சிக்குண்ட சாம்பல் நிற பூனையைக் காப்பாற்றி வெளியில் கொண்டு வந்துள்ளார். மயங்கிய நிலையில் காணப்பட்ட அந்த பூனையைத் தரையில் படுக்க வைத்து, மற்றொரு தீயணைப்பு வீரரிடம் சுவாசக் காற்று முகமூடியை எடுத்து வருமாறு பணித்துள்ளார்.

பின்னர், சுவாச காற்று முகமூடியை பூனைக்குய் பொருத்தி மீண்டும் உயிர் பிழைக்க வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

10 நிமிட போராட்டத்திற்குப் பின் அந்த பூனை சுயநினைக்குத் திருப்பியுள்ளது. தீப்பற்றிக் கொண்ட வீட்டிலுள் இருந்து நாயையைக் காப்பாற்றியுள்ளனர். ஆனால் அந்த நாய்க்கு எந்த ஒரு தீப்புண் காயமும் ஏற்பட வில்லை என உறுதிப்படுத்தினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker