Latestமலேசியா

வலுவான ஊடக சுதந்திரம்: ஊக்குவிக்க இரு அம்சங்களில் கவனம்! – கோபிந்த்

கோலாலம்பூர், ஜூலை.11-  நாட்டில் வலுவான ஊடக சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்காக தகவல் தொடர்பு, பல்லூடகத்துறை அமைச்சு இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றது என அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

பத்திரிகை , ஊடக சுதந்திரம் என்று வரும்போது அதற்கான உருமாற்று பணிகளில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி செயல்ப்படுத்த வேண்டும் என்பதை அடையாளம் கண்டுள்ளோம். குறிப்பாக திருத்தப்பட – ரத்து செய்யப்பட வேண்டிய அனைத்து சட்டங்களும் கூடிய விரைவில் செயல்படுவதை உறுதிசெய்வதும், ஊடக சபை அமைப்பதும் தான் அந்த இரு முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றது.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமைக்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமின்றி ஊடகங்கள் மற்றும் எதிர்மறையாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகியவற்றை மெளனமாக்க பயன்படுத்தப்பட்ட அடக்குமுறை சட்டங்களையும் ரத்து செய்வதாகவும் புதிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய போலி எதிர்ப்பு செய்திச் சட்டத்தை ரத்து செய்தது நாங்கள் நிறைவேற்றிய உறுதிமொழிகளில் ஒன்றாகும். அந்த மசோதா நாடாளுமன்றத்தில் முழு மனதாக ஏற்கப்படா விட்டாலும் தற்பொழுது பயன்பட்டில் கிடையாது.

பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், சமூகம் ஆகியவற்றின் விமர்சனங்களை கட்டுப்படுத்த இந்த போலி எதிர்ப்பு செய்திச் சட்டம் முந்தைய அரசாங்கத்தால் அவசரமாக இயற்றப்பட்டதாகும்.

இதற்கிடையே, ஊடக சபை அமைப்பது குறித்து  முன்னதாக  ஊடக உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் ஆகிய தரப்பினர்களிடம் கலந்துரையாடல் நடத்தி ஆலோசனைகள் – கருத்துக்கள் பெறுவதற்கும் நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என ஊடக சுகந்தரத்திற்கான மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் விவரித்தார்.

முதல் முறையாக நடத்தப்படும் இந்த ஊடக சுகந்திர மாநாட்டில் கோபிந்த் சிங் “ ஊடக சுகந்திரம் என்றால் என்ன? எதனால் அது முக்கியமாக கருதப்படுகின்றது?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

புதன்கிழமை தொடங்கி இரு நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில்   ஊடக உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள் என சுமார் 1,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker