Latestமலேசியா

வளர்ப்பு மகளிடம் பலியல் வன்கொடுமை ; குற்றத்தை ஏற்க மறுத்த முன்னாள் இராணுவ வீரர் !

சிரம்பான், ஜூலை.11-  வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை  முன்னாள் இராணுவ வீரர் (வயது 64) இன்று செஷன் நிதிமன்றத்தில் மறுத்தார்.

இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்த இவ்வழக்கை நீதிபதி ஜுனைடா முகமட் ஈசா செவிமடுத்தார். நீதிபதி முன்னிலையில்  குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பின்  போர்ட்டிக்சன், லுக்கூட் பகுதியை சேர்ந்த அந்த நபர் குற்றத்தை மறுத்தார்.

அந்நபர் கடந்த ஜூலை 6ஆம் தேதி இரவு 9 மணியளவில் பண்டார் ஸ்பிரிங் ஹில் பகுதியில் உள்ள வீட்டில் 16 வயதுடைய வளர்ப்பு மகளின் மர்ம உறுப்பு , மார்பு பகுதிகளில் கை வைப்பது, முத்தமிடுவது போன்ற செயல்களை செய்து பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 2017 குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் செக்‌ஷன் 14 () பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிருபிக்கப்பட்டால் அந்நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இந்நிலையில் நீதிபதி வழக்கை வரும் 18ஆம் தேதி ஒத்தி வைத்து குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 8,000 வெள்ளி தொகையில் ஜாமீன் வழங்கினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் அவர் உத்திரவிட்டார்.

இந்நிலையில் அந்நபர் ஒரு ஆண்டு காலமாக அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது. அவரின் தொல்லையை பொறுக்க முடியாமல் அப்பெண் தனது பள்ளி ஆசிரியரிடம் இந்த விவகாரத்தை தெரிவித்துள்ளார். ஆசிரியரின் அறிவுறுத்தலின் படி பின் போலீசில் புகார் வழங்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker