Latestமலேசியா

விமான நிலையத்தில் ஆடவர் மரணம்! 

மிரி, ஜூலை 12 – நேற்று மதியம் சரவாக்கில் பணியாற்றும் சமையற்காரர் ஒருவர்  சிங்கப்பூருக்குச் செல்ல  மிரி விமான  நிலையத்தில் காத்திருந்தபோது, விமானம் புறப்படும் முன்பே  மரணமடைந்துள்ளார்.

மிரி மாவட்ட போலீஸ் தலைவர் லிம்  மெங்  சே குறிப்பிடுகையில், இறந்தவர் இங்குள்ள  டேசா மூர்னி , பண்டார்    பாரு பெரமீஜாயவில் வசிக்கும்   நிவேக்  பிக் ஹுஹாட் (வயது 38 ) என அடையாளம் காணப்பட்டு அவரை சுமார் 12 மணியளவில்    முதலில் அங்குள்ள பாதுகாவலர் ஒருவர்தான் முகம் வாடிய நிலையில் சுயநினைவின்றி கண்டதாகக் குறிப்பிட்டார்.

அந்த ஆடவர் 1.05 மணியளவில் இறந்துள்ளார். அவர் இறப்பதற்கு  முன்பே மிரி விமான மருத்துவ குழுவும் மிரி மருத்துவமனையின் ஆம்புலன்சும் அவருக்கு “சிபிஆர்”(CPR)  முதலுதவி சிகிச்சை அளித்ததாக  தெரிவிக்கப்பட்டது.

இறந்த  சமையற்காரருக்கு நீரிழிவு நோய் இருந்ததாக அவரின் அண்ணன் குறிப்பிட்டதாக லிம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker