Latestஉலகம்மலேசியா

2 முதியவர்கள் வெட்டிக் கொன்ற பால் வெட்டுத் தொழிலாளிக்கு 7 நாள் தடுப்புக் காவல்!

சிகாமட், ஜூலை. 13- இங்கு பூலோ கசாப்பில் இரண்டு முதியவர்களை பாராங் கத்தியால் கோரமாக வெட்டிக் கொன்ற பால்வெட்டுத் தொழிலாளியை, மேல் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்க போலீசார் மாஜிஸ்திரேட் நீதிமன்ற அனுமதியைப் பெற்றனர்.

திடீரென வெறிகொண்ட  32 வயதுடைய இந்த  பால்வெட்டுத் தொழிலாளி  நேற்று மாலை இருவேறு இடங்களில் இந்த இரு முதியவர்களை வெட்டியதாக போலீசார் கூறினர்.

ஓர் உணகத்துக்கு முன் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி அவன், உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த 70 வயது முதியவரை வெட்டிக் கொன்ற பின்னர், 200 மீட்டர் தூரம் நடந்து சென்று, டுரியான் விற்று வந்த 60 வயது முதியவரையும்  வெட்டியுள்ளான்.

முதலாவதாக வெட்டப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த வேளையில், இரண்டாவதாக வெட்டப்பட்ட முதியவர் பூலோ காசாப் சுகாதார கிளினிக்கில் சிகிச்சை பெற்று வரும்போது மரணமடைந்தார்.

இந்தத் தாக்குதல் பழிவாங்கும் செயல் என்றும் இனவாதப் பின்னணியைக் கொண்டது என்றும் பல்வே று யூகச் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதை சிகாமட் போலீஸ் அதிகாரி நோர் அரிப்பின் நிராகரித்தார்.

இந்த நபர் பயன்படுத்திய 43 செண்டி மீட்டர் நீளம் கொண்ட  பாராங்கத்தி கைப்பற்றப்பட்டது. அதே வேளையில் அந்த நபர் இடுப்பில் கட்டியிருந்த பையில் மேலும் ஒரு பாராங்கத்தி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker