உலகம்

சினிமாவுக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்:- கடைசியில் நிஜமான பரிதாபம்!

தூத்துக்குடி, ஜூலை .13- சினிமாவுக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் ,உண்மையில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆர் எஸ் கோபால் இவர் ‘வலியுடன் காதல் ‘என்ற படத்தில் நடித்துள்ளார். அதனுடன் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர்.

தற்போது இவர் ‘ பூதமங்கலம் போஸ்ட்’ என்ற படத்தில் இருந்து வட்டம் மருதம் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். அவர் இறப்பது போன்ற ஒரு காட்சிக்காக அஞ்சலி போஸ்டர்களையும் -சவப்பெட்டியில் மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய வீடியோவை வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

அவர் காயார்பட்டினத்தில் ‘பானை முதல் யானை வரை கிடைக்கும்’ என்கிற பெயரில் கடை ஒன்றையிம் வைத்திருந்ததால் அவருக்கு தெரிந்த பலர் ஆ.எஸ். கோபால் மரணமடைந்ததாக கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர்.

அப்போது அது தான் நடிக்கும் புது படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்று விளக்கமளித்தார் கோபால் சிரித்துக் கொண்டே. இந்நிலையில் மீண்டும் கோபால் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது அவ்வட்டாரத்தில். அதுவும் படத்திற்காக தான் விளம்பரமாக இருக்கும் என்று அவருக்கு தெரிந்தவர்கள் நினைத்துக் கொண்டனர்.

ஆனால் உண்மையில் கோபால் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது பிறகுதான் தெரியவந்தது. உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆ.எஸ். கோபால் உண்மையிலேயே இறந்து போன விவகாரம் தெரிந்தவர் அறிந்தவர்களுக்கு தாமதமாகவே தெரிய வந்தது. இதையடுத்து அவரது உறவினர்களும் அப்பகுதி மக்களும் புலி வருது பு லி வருது என்று சொன்னக் கதையாக இருக்கே என்று உண்மை நிலவரம் அறிந்து தாமதமாக கோபாலுக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டிற்கு விரைந்து உள்ளனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker