Latestமலேசியா

சுங்கை பூலோ சிறையில் இந்திய கைதிகள் உண்ணாவிரதம்!

கோலாலம்பூர், ஜூலை. 13- சுங்கை  பூலோ சிறைச்சாலையில் இந்திய கைதிகள் சிலர் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தண்ணீர் வழங்குவதில் தங்களிடம் இனப்பாகுபாடு காட்டப்படுவதால் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக இணைய ஊடகமான மலேசிய கிniயின் செய்தி ஒன்று கூறுகிறது.

சம்பந்தப்பட்ட கைதிகளில் ஒருவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டபோது இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூன்று நாட்களாக நீடிப்பதாக உறுதிப்படுத்தியதாக அந்த செய்தி குறிப்பிட்டது.

சுங்கை பூலோ சிறைச் சாலையில் உள்ள இந்திய சிறைக் கைதிகளிடம் சிறை அதிகாரிகளின் காட்டும் இனவாதம் போக்கின் காரணமாக தன்னுடைய கணவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக கைதி ஒருவரின் மனைவி கூறியிருக்கிறார்.

இந்தக் கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் தண்ணீர் வழங்க மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது போன்ற இனவாத போக்கு அடிக்கடி நிகழ்வதாக கைதிகள் புகார் கூறி வருவதாக தெரிய வந்துள்ளது.

சிறைச்சாலை தண்ணீர் எதிர்நோக்கி இருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் கிடைப்பதால் இந்திய கைதிகள் அதிருப்தி அடைந்திருப்பதாக சிறைச்சாலை இயக்குனர் ரோஸோமான் அபுபக்கர் தெரிவித்திருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker