Latestஉலகம்

ஆயிரக் கணக்கான கடிதங்கள்- குப்பையில்

தெ ஹேக், ஜூலை 14 – நெதர்லாந்து காடொன்றில் புதைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பொதுமக்களின் கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

வழிப்போக்கர் ஒருவர் லேரன் எனும் நகரில் நடந்து கொண்டிருந்த போது, அந்தக் கடிதங்களைக் கண்டு போலீசிடம் தெரிவித்துள்ளார்.

எட்டு குழிகளில் ஆயிரக் கணக்கான கடிதங்கள் கொட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  அவை சில வாரங்களாகக் கொட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அந்தக் குற்றத்தை ஒரு அஞ்சல்காரர்தான் செய்திருப்பதாகவும் அவரின் அடையாளத்தைச் சொல்ல இயலாது என அஞ்சல் நிறுவனப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். என்ன காரணத்துக்காக கடிதங்கள் புதைக்கப்பட்டன என்பது புலனாய்வு செய்யப்படும்

நல்ல நிலையில் இருக்கும் கடிதங்கள் உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்படும். அழிந்து போன கடிதங்கள் பற்றி வாடிக்கையாளர்களுடன் பேசி முடிவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker