Latestஇந்தியா

கனிமொழி நோக்கி கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி! 

சென்னை,ஜூலை.14- கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது எதிராக வன்முறைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் தான் பீப் சூப் பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நபரை அவரது வீடு தேடி சென்று தாக்கிய சம்பவம் நடந்தது. இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது .

இந்நிலையில் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி எதை உண்பது என்று முடிவு எடுப்பவர் உண்பவர் மட்டுமே மற்றவர்கள் அல்ல என்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

ஆனால் இதை அடுத்து அதே போல் தான் எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் கற்பவர்கள் மட்டுமே நீங்களும் உங்கள் கட்சியும் அல்ல என்று அவருக்கு எதிராக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படியான நிலையில் நடிகை கஸ்தூரி கனிமொழியின் கருத்துக்கு எதிராக ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அதில் 60 ஆண்டுகால திராவிட ஆட்சி கண்ட தமிழ்நாட்டில் அடுத்த வேளை உணவு என்பதே உண்டா என்று தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை.

எனக்கு தெரிந்த சில மதங்களில் உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .அந்த மதங்களை குறை சொல்கிறாரா கனிமொழி அவர்கள் என்று அவரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker