Latestமலேசியா

குளிர்சாதனப் பெட்டி விழுந்து – குழந்தை மரணப் பிடியில்

நீலாய், ஜூலை 14 – தாமான் செம்பாக்கா வீடொன்றில் இருந்த குளர்சாதனப் பெட்டி விழுந்ததில், 5 வயது ஆண் குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும் அதில் முகமட் பாவாஸ் அட்லி முகமட் புகாரி படுகாயம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

குழந்தையின் தந்தையான முகமட் புகாரி சைனால் அனுவார், குளிர்சாதனப் பெட்டி குழந்தையின் மீது எப்படி விழுந்தது என்பது குடும்பத்தினருக்குத் தெரியாது என குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட குழந்தையின் மீது அதன் கூரான பகுதி தலையைக் குத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

தலையில் அதிகமான ரத்தம் வெளியாகி இருப்பதால், தமது மகன் சிரம்பான் துவாங்கு ஜாபார் மருத்துவமனையில் அணுக்கக் கண்காணிப்புப் பிரிவில் இருப்பதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். அமானா கட்சியின் இளைஞர் பிரிவுச் செயற்குழு உறுப்பினரான அவர் தமது முகநூலின் வழியாகக் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker