Latestமலேசியா

பாலியல் வீடியோ தயாரிப்பு: காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டனர் – ஹமிட் படோர்

கோலாலம்பூர், ஜூலை 14 – அமைச்சர் ஒருவரை பாலியல் வீடியோவில் சம்பந்தப்படுத்தி, தயாரித்தவர்கள் மற்றும் அதை பொதுமக்களுக்கு வைரலாக வெளியிட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், சிலர் கைது செய்யப்பட்டு அது சம்பந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், அந்த வீடியோ தயாரிப்பிலும் விநியோகிப்பிலும் அரசியல்வாதிகளும் அரசு சாரா இயக்கத்தினரும் சம்பந்தப்பட்டுள்ளதை அவர் மறுக்கவில்லை.

விசாரணையில், அதில் திட்டமிட்ட பெரிய சதித் திட்டம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அமைச்சரை ஒழிக்க அந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

விசாரணை முடிந்தவுடன், கைது வேட்டை தொடரும். அந்தப் பாலியல் ஆபாச வீடியோவை திட்டமிட்டே பகிர்ந்த நபர்கள் சுற்றி வளைக்கப்படுவர். அதில் கைப்பேசிகளின் மூலமும் வீடியோவைப் பரப்பியவர்களும் அடங்குவர்.

கடந்த மாதம் இரு ஆடவர்கள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆபாச வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அதில் தம்மோடு அமைச்சர் ஒருவரும் இருப்பதாக சந்துபோங் பிகேஆர் இளைஞர் பிரிவித் தலைவர் ஹாஸிக் அப்துல்லா அப்துல் அஸிஸ் ஒப்புக் கொண்டார்.

மேலும், அந்த வீடியோவின் நம்பகத் தன்மையைக் கண்டறிய அது தடயவியல் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அது வரை சிறிது காலமாகலாம் என அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker