உலகம்

மினி மார்க்கெட்டில் சிறுமி மானபங்கம்!  ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு!

கோலாலம்பூர், ஜூலை. 14-  கோம்பாக் அருகே உள்ள பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் ஒரு மினி மார்க்கெட்டில் 9 வயது சிறுமியை மானபங்கம் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு பிற்பகல் 6.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும் சம்பந்தப்பட்ட நபர் இன்னமும் அடையாளம் கண்டு பிடிக்கப் படவில்லை என்றும் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் சம்சோர் மாரோப் சொன்னார்.

அந்த சிறுமியை பின்புறமிருந்து கட்டிப் பிடித்து சில்மிஷம் செய்ததாக நம்பப்படும் நபரை தாங்கள் விரைவில் கைது செய்வோம் என்றார் அவர்.

இப்போதுனிந்தச் சம்பவம் தொடர்பான உள்கண்காணிப்பு கேமராவின் பதிவு இப்போது சமூக ஊடகங்களில் பரவியிருக்கிறது. வலைவாசிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker