Latestஉலகம்

ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சேவுக்கு விரைவில் திருமணம்!

கொழும்பு,ஜூலை.14-  மகிந்தா ராஜபக்சேவின் மூன்று  புதல்வர்களில், இரு புதல்வர்கள் தங்கள்  காதலியை கரம் பிடித்து விட்டனர்.

கடைசிப் புதல்வன் ரோஹித் ஏற்கனவே திருமணம் முடித்த நிலையில், இரண்டாவது புதல்வர் யோசித தனது  காதலியை நூற்று நிச்சயதார்த்தம் செய்தார். தனது இரண்டு தம்பிகளின்  திருமணத்திற்குப் பிறகுதான் தான்  திருமணம் செய்து கொள்ள உள்ளதாக மூத்த மகன் நாமல் ராஜபக்ச ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று, தனது காதலியின் புகைப்படத்தை அதிகாரப் பூர்வமாக  நாமல் வெளியிட்டுள்ளார் .

தனது காதலியின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியுலகிற்கு தெரிவித்த  நாமல் ராஜபக்ச,  தீவிர அரசியலில்  ஈடுபட்டு வருகிறார். இவரது காதலி  கோடீஸ்வரர் வர்த்தகர்  ஒருவரின் மகளாவார். இவர்களின் திருமணம்   செப்டம்பர் 17ஆம் தேதி  நடைபெற உள்ளது. நாமல் ராஜபக்சவை திருமணம் செய்துகொள்ள உள்ள மணப்பெண் நன்கு அறியப்பட்ட விளையாட்டு ஆர்வலரும் லங்கா ஸ்போர்ட்ஸ்  நிறுவனமான திலக வீரசிங்கவின் ஒரே மகளாவார். அவரது தாயார் தேசிய அளவிலான ஓட்ட பந்தய சம்பியனாவார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker