Latestசினிமா

என்ன சொல்றீங்க பிக்பாஸ்! வாயாடி வனிதாவுக்கு விடையா!

சென்னை,ஜூலை.15-   பிக்பாஸ்  சீசன் 3 நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும்- கோபத்தையும்  சம்பாதித்து வந்தவர் வனிதா விஜயகுமார்.

சண்டை சச்சரவுக்கு பேர் போன வனிதா இவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து  இவர் வெளியேற வேண்டும் என ரசிகர்கள் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில்  அவர் குறைந்த ஓட்டுகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியின் மத்தியில்  அதிர்ச்சியும் இருந்தது.

அதேவேளை  வனிதா வெளியேற காரணம் என்னவாக இருக்கும் என்று வீட்டில் உள்ள சிலரிடம் கமல் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஈழத்து பெண் லாஸ்லியா கூறும்போது சில விஷயங்களை அவர் எப்போதும் திரித்துப் பேசுவார். ஒரு சிறிய பிரச்சினையையும் பெரிதாக்கி கொண்டிருப்பார். வனிதாவின் சுயத்தை  அப்படியே  கூறி விட்டார் .வனிதா  வீட்டை விட்டு போகும்போது அவரின் பிக்பாஸ் வீட்டின் நிகழ்த்தப்பட்ட நினைவுகள் குறும்படமாக ஒளிபரப்பப்பட்டது .

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker