Latestஇந்தியா

சந்திராயன் -2 விண்கலம் திடீரென தற்காலிக நிறுத்தம்!

ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை,15- இன்று அதிகாலை 2. 51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திராயன்-2 கவுண்டவுன் திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-2 விண்கலம் அதிகாலை 2 51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

இதற்கான 20 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை தொடங்கியது .இந்நிலையில் அதிகாலை 2 51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திராயன்-2 கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கவுண்டன் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி ஏவுகணை என்றழைக்கப்படும் மார்க் 3 ஏவுகணை மூலம் சந்திராயன் 2 ஏவப்பட இருந்தது.

நிலவின் தென்பகுதியை ஆராயும் பணியை மேற்கொள்வதற்காக சந்திராயன் என்று ஏவப்பட இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்பே சந்திராயன் 2 ஏவப்படும் என தகவல் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ராக்கெட் ஏவுகணையில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏவுகணை ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கையில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker