Latestசினிமா

மாஜி கணவர் விஜய்க்கு அமலாபால் திருமண வாழ்த்து!

சென்னை,ஜூலை.15- இயக்குனர் விஜய் -நடிகை அமலாபால் இருவரும் காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை மூன்று வருடங்களுக்கு மட்டுமே நிலைத்தது.

2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். கடந்த வாரம் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை மணந்தார்.இவர்களது திருமணம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது .

தனது முன்னாள் கணவர் விஜய் பற்றி அமலாபால் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் .விஜய் ஒரு இனிமையான, அற்புதமான மனிதர். அவருடைய திருமண வாழ்க்கைக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த தம்பதிகள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார் .விவாகரத்துக்குப் பின் சினிமா வாழ்க்கையை பற்றி பேசுகையில் விவாகரத்துக்குப் பின் எனக்கு அக்கா, தங்கை, தோழி கதாபாத்திரம் தான் வரும் என்று நினைத்தேன் .வாழ்க்கைக்காக டிவி சீரியலில் தான் நடிக்க வேண்டும் என்று கவலைப்பட்டேன்.

ஆனால் நாம் திறமைசாலியாக இருந்தால் எதுவும் நம்மை தடுக்காது என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார் அமலாபால். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘ஆடை’ வரும் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker