Latestஇந்தியா

முன்னாள் போட்டியாளருக்கு நோட்டீஸ் அனுப்புவாரா பிக்பாஸ் கமல்!

சென்னை,ஜூலை.15- விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் சீசன்-3  நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் .தற்போது அதே மூன்றாவது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது .

இரண்டாவது சீசன் போட்டியாளரான நடிகர் டேனி இதுபற்றி விமர்சித்துள்ளார். போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக நடத்தப்படும்  முறையில் வெளிப்படைத்தன்மை தேவை.பங்கேற்பாளர்கள் வெளியேற்றத்தில் பல குளறுபடிகள் நடக்கிறது .

சென்ற முறை சென்ராயன் வெளியேற்றப்பட்டபோது பெரிய சந்தேகம் எழுந்தது. என் மனைவி கூட அவருக்கு அதிக ஆதரவு இருப்பதை உறுதி செய்யும் அளவுக்கு சில இணையதள வாக்கெடுப்புகளை காட்டினார். ஆனால் அவர் வெளியேற்றப்பட்டது எப்படி என சந்தேகம் இருந்தது என அவர் கூறியுள்ளார்.

மேலும் வாக்கெடுப்பு பற்றி இப்படி பேசி உள்ளதால் பிக் பாஸில் இருந்து நிச்சயம் வக்கீல் நோட்டீஸ் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker