Latestமலேசியா

அண்ணனை பட்டாசு மூலம் கொல்ல முயன்ற தம்பி

சுங்கை பட்டாணி, ஜூலை 16- இங்குள்ள தாமான் பதானி ஜெயாவிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மாற்றியமைக்கப்பட்ட பட்டாசு ஒன்றை வீசிய, 36 வயது நபர் ஒருவர் தனது சகோதரனைக் கொல்ல முயன்றார்.

தனது 60 வயது சகோதரனை நோக்கி வீசுவதற்கு முன்னர், பட்டாசுகளைத் தனது கைகளில் வைத்துகொண்டு அது வெடிக்கும் தருணத்தில் தம்முடைய அண்ணனை நோக்கி வீச முற்பட்டபோது நடந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆடவனும் காயமடைந்துள்ளார் என் தெரிய வருகிறது.

மாலை மணி 5.40க்கு நடந்த இவ்விபத்தில் அந்த நபரின் வலது கையில் காயமடைந்ததோடு அருகில் நின்று கொண்டிருந்தவரின் அண்ணனின் இடது கை, இடது காது மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த 60 வயதுடைய முதியவர் தனது சகோதரருக்குக் கணினியைக் கொடுக்கச் சென்ற போது நடந்ததாக கோலா மூடா  மாவட்ட போலீஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.

தம்முடைய தம்பிக்காக ஒரு மணி நேரமாக  சூப்பர் மார்க்கெட்டில் காத்திருந்த  அந்த 60 வயதுடைய அண்ணனைக் கண்ட தம்பி கொலை செய்யப் போவதாக மிரட்டினார்.

பின்னர் சந்தேக நபர் மாற்றியமைக்கப்பட்ட பட்டாசைப்  பற்ற வைத்து அதனை தனது சகோதரனை நோக்கி வீச முயற்பட்டபோது, கையில் இருந்த பட்டாசு அவரது கையில் வெடித்துள்ளது என்றும் இதம் விளைவாக அந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது என அட்ஸ்லி அபு இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காயமடைந்த இருவரும்  அவர்களுடைய வாகனத்தின் மூலம் தனி தனியே மருத்துவமனைக்கு சென்று பின்னர் அங்கிருந்து சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரின் மீது 9 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என அட்ஸ்லி கூறினார்.

மேலும், இச்சம்வம் குறித்தும், அந்த நபர் மீது  கொலை குற்றத்திற்காக குற்றவியல் சட்டதின் செக்‌ஷன் 307 பிரிவின் கீழ்  விசாரணை நடத்தப்படும் என அட்ஸ்லி கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker